‘கமாண்டோ ஏகே 47′
அசத்தல் ஆக்ஷன் படம்
பழைய படத்தை ரீமேக் செய்து வெற்றிவெறுவது ஹாலிவுட்காரர்களின் துணிச்சல் எப்போதோ எடுத்த படத்தை மறு உருவாக்கம் செய்கிற போது காலத்துக்கேற்ப நவீன தொழில்நுட்ப ஜாலங்கள் புகுத்தி ரசிக்க வைப்பதுதான் வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.
1984ல் வெளிவந்த படம் ‘ரெட் டான்’ (Red Dawn) இப்படத்தை இதே பெயரில் மீண்டும் உருவாக்கி வெளியிட்டு எடுக்கப்பட்ட இப்படம்.வசூலிலும் சோடை போகவில்லை ‘ரெட் டான்’ படம் தமிழில் ‘கமண்டோ ஏகே 47′ என்கிற பெயரில் வெளிவருகிறது.
இப்படம் முதலில் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. இரண்டே நாளில் 7.4 மில்லியன் டாலர் வசூல் செய்தது. அப்போது வசூல் படங்களில் 7வது இடம் வகித்தது.முதல் வாரத்தில் 14.69 மில்லியன் டாலருக்கு உயர்ந்து வார இறுதியில் 22,00,4000 மில்லியன் டாலரை அள்ளியிருக்கிறது. க்ரிஸ் ஹென்ஸ்வொர்த்,இசபெல் லூக்காஸ்,ஜோஷ் ஹட்சர்சன்,கானர் க்ருஸ் நடிக்க இயக்கியிருப்பவர் டேன் பிராட்லி இவர் ஸ்பைடர் மேன்,இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் சண்டைக் காட்சிகள் ஒருங்கிணைப்பாளாராகவும் இரண்டாவது யூனிட் இயக்குநராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.
இது ஒரு போர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் படம்தான். இதை தயாரித்துள்ள நிறுவனம் MGM அதாவது மெட்ரோ கோல்டுவின் மேயர் (Metro Goldwyn Mayer) பல போராட்டங்கள் தடங்கள்களுக்குப் பிறகுதான் படம் உருவானது. 2008ல் இப்படத்தின் தயாரிப்பு அறிவிப்பு வந்தது. 2009ல் தொடங்கப்பட்டது. 2010 நவம்பரில் வெளியிடத் திட்டமிடப்பட்டது.
ஆனால் பொருளாதாரப் பிரச்சனை ஒருபக்கம் தாமதப்படுத்தியது. கதையில் வரும் எதிரிகள் வில்லன்கள் சீனாவிலிருந்து வருவதாக ஆரம்பத்தில் கதை உருவாகி காட்சிகளும் எடுக்கப்பட்டன. இப்படி எடுத்தால் சீனாவில் படம் எப்படி வெளியாகி வசூல் செய்யும் ? எனவே வில்லன்கள் வடகொரியார்களாக மாற்றி கதை அமைத்து எடுக்கப்பட்டது.
வில்லன்கள் சீனர்கள் என்று இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ள செய்தி சீனாவின் ‘குளோபல் டைம்’ பத்திரிகையில் வெளியாகி சர்ச்சை வரவே. சீனர்கள் என்பதை வட கொரியர்கள் என்று மாற்றி கதை அமைக்கப்பட்டது. இதனால் பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும் சீனாவுக்கென்று ‘ஒரு ஹாலிவுட் பட வியாபாரம் இருக்கிறது. எனவே சீனாவையோ சீனர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது என்ற வகையில்தான் இந்த மாற்றம்.
நாளைய பொழுது எப்படி விடியுமோ என்பது நம்நாடின் மக்களின் கவலை. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் ஒரு நகத்தில் அதிகாலை நேரத்தில் பொழுதுபுலரும் முன் செவ்வானம் கலையும் முன்பு அன்றைய பொழுது எப்படி இருக்கப் போகிறதோ என்று மக்கள் கவலையுடன் காலைக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று நடக்கிறது. வான் வழியே தாக்குதல் நிகழ்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று மக்கள் அதிர்கிறார்கள். நகரத்தை குறிவைத்து நாட்டுக்கே ஆபத்தாகி விடும் அபாயம் குறித்து சில இளைஞர்கள் மட்டும் பொறுப்புணர்வு கொள்கிறார்கள். அவர்கள் க்ரிஸ் ஹெம்ஸ் வொர்த்,ஜோஷ் பெக்,ஏட்ரினா பாலிக்கி,கானர் க்ருஸ்,எட்வின் ஹாட்ஜ். தானுண்டு தங்கள் வாழ்க்கை உண்டு என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை எதி கொள்ளும் பதின் பருவத்தின் இவர்கள். இவர்கள் சொந்த ஊருக்கு அப்போதுதான் விடுமுறைக்கு வந்திருக்கிறார்கள். அங்கு தங்கியிருக்கும் போது அவர்கள் கண்ட அனுபவம், அவர்களைப் போராளியாக்குகிறது. தங்கள் நகரத்தைக் குறிவைத்து தாக்கி பேரழிவு ஏற்படுத்த முனையும் வடகொரிய போர்வீரர்களின் செயலை முறியடிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த ஐவர் அணி கொரில்லா முறையில் பதிலடி கொடுக்க தீர்மானிக்கிறார்கள். தங்கள் குழுவிற்கு ‘வால் வரின்ஸ்’ என்று பெயர் வைத்து கொண்டு அவர்கள் எப்படி அந்நிய சக்தியை முறியடித்து சொந்த நகரத்தைக் காப்பாற்றுக்கிறார்கள் என்பதே ‘கமாண்டோ ஏகே 47′ கதை.
ஒரு போர் சம்பந்தபட்ட கதை என்றாலும் அக்ஷன் படம் என்றாலும் சென்டிமெண்ட் காட்சிகளும் உண்டு.
வால்வரின் என்பது கரடி மாதிரி ஒரு விலங்கு, சிறந்த வேட்டையாடி அதன் நகங்கள் விசேடமானவை வேட்டையாடும்போது பயங்கரமாக இருக்கும். இந்தப் பெயரை வைத்துக் கொண்டு படத்தில் வாலிப வீரர்கள் செய்யும் சாகசங்கள் சிலிர்க்க வைக்கும்.
இப்படத்தின் கதை பற்றி ஆரம்பத்தில் நல்ல படியாக விமர்சனங்கள் வரவில்லை. நம்ப முடியாத கதை. காதில் பூ சுற்றுகிறார்கள். சின்னப் பசங்களை வைத்துக் கொண்டு கதை விடுகிறார்கள். என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் பரபரப்பு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்பதை மட்டும் எல்லாரும் ஒப்புக் கொள்ளத் தவறவில்லை. ரசிகர்கள் தீர்ப்பு விமர்சனங்களுக்கு எதிராக இருந்தது. படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்தார்கள். வசூலில் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இப்படம் அமெரிக்காவைத் தொடர்ந்து உலக நாடுகளில் வெளியாக இருக்கிறது. நம்மூர் தியேட்டர்களிலும் விரைவில் திரையிட இருக்கிறார்கள். பல ஆங்கில படங்களை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு வந்த ஏ.வி.மோகன் அவர்களுடன் ப்ளூ மேட் பிக்சர்ஸ் (BLUE MATT PICTUERS )இணைந்து வெளியிடும் முதல் படம் இது. இப்படம் தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர உள்ளது.
You can skip to the tip and leave a response. Pinging is currently not allowed.