Tamil Cinema News Tamil Chat, TamilChat Tamil Chatting Portal Download Tamil Songs, Download Tamil MP3 Songs

Monday 23 July 2012

அடுத்த பவர்ஸ்டார் ???

இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தை கலக்கும் ஹீரோ யார் என்றால் அது சக்கரவர்த்தி திருமகன் கதாநாயகன் திரு. சக்கரவர்த்தி என்றால் மிகையாகாது. இன்று () மாலை இவரின் புதிய படமான சக்கரவர்த்தி திருமகன் பட இசை வெளியீடு பிரசாத் லேபில் நடைபெற்றது. கோடம்பாக்கம் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் விழாவாக இது நடைபெற்றது என்றே சொல்லவேண்டும்.

இந்த படத்திற்கான விளம்பரங்கள் நேற்று முதல் வடபழனி எங்கும் நிறைந்து காணப்பட்டது. இதனை பார்த்த அனைவரும் இதுவும் இன்னொரு படம் என்று மட்டுமே நினைத்திருந்தனர். ஆனால் இன்று மாலை விழா நேரம் நெருங்க நெருங்க பிரசாத் லேபில் கூட்டம் சிறிது சிறிதாக கூடி நிற்க இடமில்லாத அளவிற்கு பெரும் கூட்டம் கூடியது. வழக்கமாக விழாவிற்கு அழைக்கபட்டவர்களே வர தயங்கும் இந்த காலத்தில் அழைப்பிதழ் இல்லாமல் நிறைய பேர் வந்திருந்த காரணத்தால் அரங்கம் நிரம்பி அரங்கிற்கு வெளியே தள்ளுமுள்ளு ஏற்பட்டது தனி கதை.

விழாவிற்கு வந்திருந்த பெண்கள் இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போலவே இருக்கிறார் என கூறி கதாநாயகன் திரு. சக்ரவர்த்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தனர். விழாவிற்கு வந்த சிலர் இவர் இன்னொரு பவர்ஸ்டார் என்று கூறி அவரையே பார்த்துகொண்டிருந்தனர்.