Tamil Cinema News Tamil Chat, TamilChat Tamil Chatting Portal Download Tamil Songs, Download Tamil MP3 Songs

Monday 3 December 2012

Children Drakula Movie News

உலக அளவில் வசூல் படைத்த

‘ஹோட்டல் ட்ரான்சில்வேனியா’

முழுநீள 3D அனிமேஷன் படம்

பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து படப்பிடிப்புகள் இல்லை.

இப்படி பல இல்லைகள் கொண்டு ஒரு படம் உருவாகி பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு விட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் இது நிஜம். அந்தப்படம் தான் ‘ஹோட்டல் ட்ரான்சில்வேனியா’ (Hotel Transylvania) இது ஒரு 3டி அனிமேஷன் படம்.

முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில் வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி (Genndy tartakousky).

ட்ராகுலா என்றால் ரத்தம்,பீதி மனிதர்களை கொல்வது என்று இதுவரை பயமுறுத்தியே வந்திருக்கிறார்கள். டிராகுலாவை வைத்து வயிறு வலிக்க சிரிக்க வைக்க முடியும் அதுவும் குழந்தைகளை கவர முடியும் நிரூபித்துள்ள படம்தான் ‘ஹோட்டல் ட்ரான்சில்வேனியா’ அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஆடம் சாண்ட்லர்,ஆன்டி சம்பெர்க்,ஜெயின் ஜெம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். டிராகுலா ஒரு தங்கும் விடுதி கட்டி வைத்துள்ளது. அதன் வடிவமைப்பும் உரிமையும் அதற்கே சொந்தம். ஐந்து நட்சத்திர தகுதி கொண்ட ஹோட்டல் போன்று அனைத்து வசதிகளும் கொண்டது. மனித சஞ்சரமற்ற இடத்தில் அதை அமைந்துள்ளது. தன்னைப் போல டிராக்குலாக்கள்,பூதங்கள் அங்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு.

ஒரு வார இறுதியில் தன் மகள் மேவிஸ்ஸின் 118வது பிறந்த நாளை பிரமாண்டமாகக் கொண்டாட நினைக்கும் டிராகுலா தன் நண்பர்களை அழைக்கிறது. மம்மி,இன்விசியின்மேன் போன்ற பூதகணங்கள் தங்கள் துணையுடன் அங்கு வருகின்றன. பிரமாண்டமானவர்கள் பயங்கரமானவர்கள் கூட்டம் கூடுகிறது. ஆனால் சில எதிர்பாரதவை நடக்கின்றன.

டிராகுலாவுக்கு மனித சஞ்சரம் பிடிக்காது. அதுபோல் காதலும் பிடிக்காது. இவை இரண்டின் நிழல் கூட தன் மகள் மேவியை 118 வயது வரை வளர்த்து விட்டது. ஆனால் அவ்வளவு பாதுகாப்பையும் கடந்து இரண்டும் யதேச்சையாக் அங்கே நுழைந்து விடுகிறது. மகளை காப்பாற்ற டிராகுலா படும்பாடு நகைச்சுவை ரணகளம். இப்படி முழுக்க சிரிக்க வைக்கும்படி உருவான இந்தப்படம் வசூலான படங்களின் வசூலை அசைத்து முதலிடம் பெற்று பெற்று முந்தியுள்ளது என்றால் பாருங்களேன்.

செப்டம்பர் 28ல் வெளியாகி அடுத்த இரண்டு நாட்களில் 4,25,22,194 டாலர்களை வசூல் செய்தது. இந்த வசூல் வீச்சு பிற படங்களை பின்னுக்குத் தள்ளி விட்டது. அக்டோபர் 5 முதல் 7வரை 2,70,53,395 டாலர்கள். 12 முதல் 14 வரை தியேட்டர்கள் 3349 லிருந்து 3375 ஆக அதிகரித்ததுடன் வசூலும் 1,72,41,317 டாலர்கள் ஆனது.

அக்டோபர் 19 முதல் 21 வரை 1,30,01,434. 26 முதல் 28 வரை 9,444,014 நவம்பர் முதல் வார இறுதி வசூல் 4,409,785, என்ரு பாக்ஸ் ஆபீஸ் களைகட்டியது. நவம்பர் 25 வரையிலான வசூல் 291 455 525 டாலர்கள். அதாவது 85 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் குறுகிய காலத்தில் 291 மில்லியன் டாலர்களை அள்ளியிருக்கிறது. இதில் உள்நாட்டு வசூல் 49.3% என்ரால் சில வெளிநாட்டு வசூல் 50.7% இன்னும் ஏராளமான வெளிநாடுகளில் வெளியாக வேண்டியும் உள்ளது. விரைவில் நம் நாட்டில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது.

இந்த அதிரடி வசூலையடுத்து இதன் அடுத்த பாகம் உருவாக்கி 2015ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது

You can skip to the top and leave a response. Pinging is currently not allowed.